
Tamil Native Breeds
தமிழ்நாட்டு நாய் இனங்கள்
தமிழ்நாட்டு நாய் இனங்கள்
தமிழ்நாட்டு நாய் என்ற உடனே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது ராஜபாளையம் நாய்களே. ஆம் இன்றளவும் தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பது ராஜபாளையம் நாய்களே.ஆனால் நாம் காக்க வேண்டியது ராஜபாளையம் நாய்களை மட்டும் அல்ல. நம் தமிழ் நாட்டின் நாய் இனங்கள் ஆறு வகை உள்ளது.அவை அனைத்தையும் நாம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.பல நாட்டு நாய் இனங்கள் அழிந்து விட்டது. இருக்கும் மற்ற இனங்கள் தெரு நாய்கள் ஆக்க பட்டு வருகின்றது ஒரு சிலரால் மட்டும் சரியான முறையில் பாதுகாக்க படுகின்றது.. மற்ற எந்த ஒரு அந்நிய நாட்டின் நாய் இனங்களுக்கு இல்லாத வரலாறு நமது நாட்டு நாய்களுக்கு உள்ளது நம் நாட்டு இனவழி நாய்களை காத்து எதிர்கால சந்ததியினர்க்கு கொண்டு செல்வதே இந்த இணையத்தின் நோக்கம்.மீதம் இருக்கும் நாட்டு நாய் இனங்கள் முறையே பின் வருமாறு
-
ராஜபாளையம்
-
கன்னி அல்லது சிப்பி பாறை
-
கோம்பை / கிடை நாய்
-
கட்டை கால் அல்லது குட்டை கால்
-
பரிய

நாய்கள் பற்றிய குறிப்பு
கன்னி அல்லது சிப்பிப்பாறை



தமிழகத்தின் வேட்டை இனங்களான கன்னி நாய்கள் பிறப்பிடம் சிப்பிப்பாறை இந்த நாய்கள் வேட்டைக்கு புகழ் பெற்றவை.பலர் கன்னி மற்றும் சிப்பிப்பாறை வேறு வேறு இனங்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றனர். இரண்டும் ஒரே இனங்களே கன்னி கருப்பில் கண்ணனுக்கு மேலே இருக்கும் சந்தன புள்ளிகளளை வைத்து அதனை கன்னி என்று அடையாளம் காண்பர் , தங்கள் பெண் குழந்த்தைகளுக்கு திருமண சீர் செய்வர். அதாலேயே இந்த பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
கன்னி மற்றும் சிப்பிப்பாரை நாய்கள் செங்கன்னி ,பால்கன்னி ,மயிலை கன்னி, பருக்கி, பிள்ளை ,சந்தனபிள்ளை கன்னி ஆகிய வனங்களில் கிடைக்கின்றது
குட்டிகள் வாங்கும் பொது கவனிக்க வேண்டியவை
இந்த குட்டிகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிடைக்கின்றது.இந்த குட்டிகளை வாங்க நினைப்பர்வர்கள் முதலில் இதற்கு சரியான இட வசதி இருந்தால் மட்டும்.என்றென்றால் இவை வேட்டை நாய்கள் கட்டி போட்டு வளர்தல் கூடாது. அதற்க்கான இட வசதி சுகந்திரம் தேவை.கன்னி நாய் குட்டிகள் வாங்குவர் முடித்தால் ௨ குட்டிகளாக வாங்கவும் இல்ல என்னால் ஒரு குட்டி மட்டும் தான் வாங்க முடியும் இரு குட்டிகளுக்கு என்னிடம் பணம் இல்லைஎன்று எண்ணுபவர்கள் ஒரு தெரு நாய் குட்டியை எடுத்து இரண்டையும் ஒன்றாக வளர்க்கவும்.இந்த கன்னி மற்றும் சிப்பிபாறை நாய்களை வியாபாரத்திற்க்காக கேரவன் ஹவுண்ட் உடன் இனப்பெருக்கம் செய்து அதிகமான உயரம் உடைய நாய்களாக உருமாற்றி வியாபாரம் செய்கின்றனர். இதை மனதில் வயித்து கொண்டு வாங்கவும். தோற்றத்திர்காக அதன் இயற்கையை அழிக்க நினைக்கின்றனர். முதலில் கேரவன் ஹவுண்ட் எது சிப்பிபாறை எது என்று தெரிந்து கொண்டு வளர்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அணுகவும்
கோம்பை /கிடை நாய்


ராமநாதபுரத்து கோம்பை நாய் இதற்கு பல பெயர்கள் உள்ளன. கிடை நாய் ,கேதாரி நாய் , கோம்பை நாய்,சாம்பல் நாய் எல்லா பெயர்களுக்கு பின்னரும் ஒரு கதை உள்ளது. காவல் வேட்டை ஆட்டு மேய்ச்சல் போன்ற வேலைகலை செய்ய இந்த கோம்பை நாய்கள் பயன்படுத்த படுகின்றது. வரலாற்றில் கோம்பை நாய்களுக்கு இடம் உள்ளது. சிவகங்கையை ஆண்ட மருது சகோதர்கள் தங்கள் ஒரு படை பிரிவாக இந்த கோம்பை நாய்களை வைத்து உள்ளனர்.. இப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கோம்பை நாய்கள் தெருவில் தெரு நாய்களாக தெரிகின்றன.மற்ற உங்கள் போல் இல்லாமல் இந்த கோம்பை நாய்களை முறையாக பராமரிப்பவர் சிலரே.இந்த இன நாய்களை காப்பாற்றும் நோக்கில் சிலர் இதன் குட்டிகளை இலவசமாக கொடுத்து வருகின்றனர் விற்கவும் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமங்களில் இந்த நாய்கள் இன்றும் பாதுகாத்து வளர்க படுகின்றன.இந்த நாய்கள் சாம்பல் , பாலைமறை சாம்பல் (சாம்பல் மற்றும் வெள்ளை),கருசாம்பாள் , கருமரை (கருப்பு மற்றும் வெள்ளை), சேவலை மறை (சிவப்பு மற்றும் வெள்ளை ),கருப்பு ,வெள்ளை ,ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.
குட்டிகள் வாங்கும் பொது கவனிக்க வேண்டியவை
பொதுவாக இந்த கோம்பை நாய் குட்டிகள் பெரிய குட்டிகளாக இருக்கும் . குட்டியேலேயே சேட்டை அதிகமாக செய்யும் எனவே வீட்டில் குட்டி விளையாட இடம் கண்டிப்பாக வேண்டும். இந்த கோம்பை நாய் குட்டிகள் ராமநாதபுரத்தின் கமுதி பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டம் பெருநாழி போன்ற பகுதிகளிலும் கிடைக்கும். விசியம் தெரிந்தவர்களிடம் கேட்டு பின்பு வாங்கி கொள்ளவும்...
கட்டை கால் அல்லது குட்டை கால்

கட்டை கால் குட்டை கால் நாய்கள் அதன் சிறிய உருவத்தினால் அந்த பெயர்கள் வந்தன இதன் பிறப்பிடம் நாகப்பட்டினம் இன்றும் நாகப்பட்டினம் தஞ்சாவூர் காரைக்கால் பகுதிகளில் இந்த நாய்கள் வளர்க்கப்படுகின்றன.இவை கோப குணம் கொண்ட அதே போல பாசமும் அதிகமாக கொண்ட நாய்களாக இருக்கின்றன. பொதுவாக இந்த வகை நாய்கள் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.இந்த வகை நாய்கள் வளர்க அதிகபடியான இடம் தேவை இல்லை .வீட்டின் உள்ளேயே போட்டு வளர்க்கலாம் .குறைவான கவனிப்பு இருந்தால் போதுமானது .
இந்த நாய்கள் வீட்டு காவலுக்கு சிறந்தவை. வீட்டிற்குள் நுழய முயலும் எந்த ஒரு விஷ பூச்சிகளையும் நம்மிடம் அண்ட விடாது.பாம்புகள் கண்ணில் பட்டால் விடாது பாம்புகளை கொன்று 5 அல்லது 6 துண்டுகளாகிவிடும் .காரைகால் வசிக்கும் நண்பர் சொன்னது இவை காரைகால் பகுதிகளில் உள்ள மீன் கழிவுகளை சாப்பிட்டு வளர்வதால் இந்த அளவு ஆரோக்கியமானதாக இருக்கென்றதும் அதன் வாழ்நாள் 15 வருடம் வரை இருக்கும் என்றும் கூறினார்..இன்றய சூழலில் காக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த நாய்கள் முதல் இடத்தில் உள்ளன. அப்பார்ட்மெண்ட் வாசிகள் கூட தாராளமாக இந்த வகை நாய்களை வாங்கி வளர்க்கலாம்.முடித்த வரை வீட்டில் 2 கட்டை கால் நாய்களை வாங்கி வளர்த்து அதில் இருந்து வரும் குட்டிகளை மற்றவரிடம் கொடுத்து வளர்க சொல்லுங்கள்..இன்னும் இந்த வகை நாய்கள் வியாபாரிகளிடம் போக வில்லை எனவே சரியான ஆட்களை தேர்வு செய்து இத நாய் குட்டிகளை வாங்குங்கள்.இந்த நாய்கள் அதிக பட்சம் 4 குட்டிகளை ஈனும். அதனாலேயே இந்த குட்டிகல் வெளியே கொடுக்கப்படுவது இல்லை.காரைக்கால் , நாகபட்டினம் ,தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இந்த வகை நாய்கள் கிடைக்கும் அவர்களிடம் இருந்து வாங்கி வளர்த்து கொள்ளவும் ..

இந்தியன் பரிய நாய்கள்

நீங்கள் நினைப்பது சரிதான் இது நம் தெரு நாய்கள் தான். இவையும் நம் நாட்டு நாய்களே இவை அணைத்து சீதஉஷ்ண நிலையிலும் வாழகூடியது இந்தியா முழுவதும் சுமார் 25000000
தெரு நாய்கள் உள்ளதாக சில தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த தெரு நாய்களை யாரும் விருப்புவது இல்லை . சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இந்த பரிய நாய்களை எடுத்து வழக்கின்றனர். பல இடங்களில் இந்த நாய்களால் தொல்லை என கொள்ளவும் படுகின்றது.இந்த வகை நாய்கள் பல நிறங்களில் பல உயரங்களில் நம் தெருவில் சுற்றுவதை பார்ப்போம். எல்லா நாய்களுமே கண்டிப்பாக நன்றாக காவல் காக்கும். தைரியமாக இந்த நாய் குட்டி கிடைத்தால் எடுத்து வீட்டில் வைத்து வழக்க நினைப்பவர்கள் தளரமாக வளர்க்கலாம்.
ராஜபாளையம்
_edited.jpg)
ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும்.இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்.இந்த இனம் முன்னாளில் எல்லா வண்ணங்களிலும் இருந்தது அனால் இப்பொழுது ஒரே நிறத்தில் மட்டுமே உள்ளது வியாபாரத்திற்க்காக ஒரே நிறம்உள்ள நாய்களும் மட்டும் இனப்பெருக்கம் செய்து மற்ற நிற நாய்களை அழித்து விட்டனர்
தற்போது உள்ள ராஜபாளையம் நாய்கள் வெள்ளை மற்றும் இளம்சிவப்பு மூக்குடன் இருக்கின்றன். இவை அல்பினோ வகையை சேர்ந்தது .இந்த வகை நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இவை மூர்கமான காவல் காரன் வளர்த்தவர்களிடம் பாசமாவாவும் புதியவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும் இதற்கும் அதிகப்படியான கவனிப்புகள் தேவை
குட்டிகள் வாங்கும் பொது கவனிக்க வேண்டியவை
ராஜபாளையம் குட்டிகள் நமது நாட்டு இனத்திலேயே விலை அதிகமானவை அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக பார்த்து விட்டு குட்டிக்கு காது நன்றாக கேட்க்கின்றதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் முடிவு செய்யுங்கள்.முடித்த வரை நேரில் சென்று குட்டிகளை மற்றும் தாய் தந்தை இனப்பெருக்கம் செய்த புகைப்படம் அனைத்தையும் பார்த்து விட்டு வாங்குங்கள்
குளிர் மற்றும் மழை காலங்களில் இந்த குட்டி வாங்காமல் இருப்பது நல்லது அப்படி தெரியாமல் வாங்கிவிட்டர்கள் என்றால் அதிக கவனம் வேண்டும்
இன்றய மதிப்பில் ஒரு குட்டி 5௦,௦௦௦ ரூபாய் வரை விற்க படுகின்றது
